2022 ஆம் ஆண்டில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலையேற்றம்
53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் புதுப்பிப்பின்படி, 2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் உள்ளது.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிப்பு, அதிக பெயரளவிலான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், ஆண்டு அடிப்படையில் 91% உடன் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
உயர்ந்துள்ள வீதம்
2021 செப்டம்பரில் 9.9% ஆக இருந்த இலங்கையின் உணவுப் பணவீக்கம், ஏப்ரல் 2022 (45.1%) முதல் ஜூலை 2022 (90.9%) வரையிலான நான்கு மாத காலப்பகுதிக்குள் உயர்ந்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் உணவுப் பணவீக்கம் 353% என்ற பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்திலும், லெபனான் 240% மற்றும் வெனிசுலா 131% உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மேலும் இலங்கைக்கு அடுத்தபடியாக முறையே டர்கியே, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளன.