நாட்டில் மீண்டும் உணவு பஞ்சமா?
நாட்டில் வரவு செலவு திட்டமானது ஏழைகளே குறிவைத்து தாக்கும் விதத்திதில் இருப்பதாக ஹெக்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது ஏழைகளை குறிவைத்து தாக்கும் விதத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
"ஒரு விபத்து ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு செலுத்த வேண்டுமாம். ஒரு விபத்து ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்ட நபர் காப்புறுதி நிறுவனத்தை அணுகி நட்ட ஈட்டினை பெறுவதே வழமையாகும்.
மேலும் தற்போது நாட்டில் மரக்கறிகள் விலையானது 700 ரூபாவைக் கடந்து விட்டது. இதனால் ஏழை மக்கள் மரக்கரைகளைக் கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உரமின்றி விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதே நிலை
தொடர்ந்தால் நாடு மீண்டும் ஒரு உணவு பஞ்சத்தை சந்திக்க நேரிடும்.
அமெரிக்கா வரவு - செலவு திட்டத்தால் ஏழைகளை தாக்கிய இந்த அரசிடமிருந்து மக்களை கடவுள் தான் கைப்பற்ற வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.