சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை; மீட்புக் குழுவிற்கு பாராட்டு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த தொடர் கனமழையால் பல பிரதேசங்கள் வெள்லத்தில் தத்தளிததால் மகள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தனர்.
புயல் காரணமாக சென்னை நகரின் வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிகரனை, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சில இடங்கள் வழமைக்கு திரும்பினாலும், தாழ்வான பகுதிகள் இன்னும் தண்ணீரில் இருக்கின்றன. இதனால், வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் குடியிருப்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் இருப்பவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர்
இந்நிலையில், நடிகை கனிகா சென்னையில் தனது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்ததாகவும் மீட்புக் குழுவினர் வந்து மீட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
தனது குடியிருப்பு பகுதியைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை கனிகா,
“நாங்கள் மீட்கப்பட்டோம், குடிநீர் விநியோகம் இல்லை, மின்சாரம் இல்லை. வெள்ள நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்ததால் எங்களுக்கு வேறு வழி இல்லை. மீட்புக் குழுவினருக்கும் அவர்களின் முயற்சிக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 150க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.