வெள்ளத்தில் மூழ்கிய பரீட்சை நிலையம் !
இன்று காலை கொழும்பு பிரதேசத்தில் பலத்த மழை பெய்ததையடுத்து சி. டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியதால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபையின் மாவட்ட 3 அலுவலகம் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களில் பரீட்சையை நடத்துவதற்கு கடுமையாக உழைத்ததாக பாடசாலை அதிபர் சம்பிக்க வீரதுங்க தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலையின் பிரதான வாசலில் இருந்து பரீட்சை நிலையத்துக்குச் செல்ல தீயணைப்புப் படைக்குச் சொந்தமான வாகனம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கொழும்பு கல்விப் பணிப்பாளர் ஜி. என். சில்வாவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள் ளப்பட்ட இந்த நடவடிக்கையின் காரணமாக, தாமதமின்றி பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக அதிபர் மேலும் தெரிவித்தார்.