அத்தனகலு ஓயாவின் பல தாழ்வான பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை!
அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், அடுத்த 3 - 24 மணித்தியாலங்களில் பல பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்வான பகுதிகளான மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் சிறிய வெள்ளம் ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்றிரவு (22-11-2023) 07:00 மணி நிலவரப்படி அத்தனகலு ஓயா படுகையின் பெரும்பாலான மேல் நீரோடை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் பதிவாகியுள்ளது.
எனவே, இது தொடர்பில் ‘ஆம்பர்’ எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
அனைத்து பிரதேச மக்களும், அப்பகுதியினூடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும், இது தொடர்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கோரியுள்ளது.