களனி கங்கை பிரதேசங்க்களுக்கும் வெள்ள எச்சரிக்கை!
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் பெருவெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவும் சூழல் இன்னும் தொடர்வதால் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும் என்பதால், கங்கையை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.