அடுத்த 24 மணி நேரம் கொழும்புக்கு எச்சரிக்கை; மிகப்பெரிய வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்!
சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம், எச்சரித்துள்ளது.
களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான நீர்ப்பாசன இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார்.

மூழ்கும் அபாயத்தில் கொழும்பு
களனி நதிப் படுகையின் பல இடங்களில் தற்போது பெய்து வரும் கனமழை, மேல் களனி நதிப் படுகைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் களனி நதிப் படுகையின் பராமரிக்கப்படும் நீர்மட்டம் ஆகியவற்றை நீர்ப்பாசனத் துறை பகுப்பாய்வு செய்த பின்னர் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதற்கு முன்னரும் கொழும்பில் பல சந்தர்ப்பங்களில் வெள்ள அபாயம் இருந்தபோதிலும் தற்போது அதிக பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படும் எனவும் நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.