நடுவானில் பகீர் கிளப்பிய சம்பவம்; விமானத்தின் மீது மோதிய பறவைக் கூட்டம்!
விமானங்களின் மீது பறவை மோதும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறு விமானத்தின் மீது பறவைகள் மோதும் போது, அதனால் அதன் உடல் பகுதி மீது ஏற்படும் பாதிப்புகள், விரிசல்கள் ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதோடு, பறவைகள் எஞ்சினுக்குள் சிக்கிக் கொண்டால் எஞ்சின் செயல் இழந்து பெரும் விபத்து ஏற்படவும் வாய்க்கள் உண்டு. அவ்வாறு நேரிட்டால் அது பயணிகளின் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் இத்தாலியில் நடந்துள்ளது.
காற்றில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மீது பறவைகள் கூட்டம் ஒன்று மோதியதை அடுத்து, விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது. அதோடு பறவைகள் மோதிய பிறகு, விமானத்தின் கண்ணாடியில் அதன் ரத்தத் துளிகள் சிறகுகளும் காணப்பட்டதன் காரணமாக விமானியால் பார்க்க கூட முடியாமல் போனதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் (Bologna Airport) தரையிறங்குவதற்கு சற்று முன்பு, விமானம் மீது ஹெரான் பறவைகள் (ஹெரான்கள்) கூட்டம் மோதியதாகவும் கூறப்படுகின்றது.
விமான நிலையத்தில் இருந்து ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதோடு இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
எனினும் விமானி மிகவும் எச்சரிக்கையுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
