தென்னிலங்கையை உலுக்கிய படுகொலைகள் - இரண்டு பெண்கள் அதிரடியாக கைது
பெலியத்தயில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர் .
ரத்கம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (29) காலை ஹக்மன பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பூஸா பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குறித்த இரு பெண்களில் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து பூஸா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.