குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, தவசிகுளம் பகுதியில் காணப்பட்ட மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிகள் கூட்டில் இருந்து திடீரென களைந்து சென்று அப் பகுதி மக்கள் சிலரை தாக்கியது அதில் பார்வதி (வயது 66), இரத்தினசிங்கம (வயது 66), மூர்த்தி (வயது 47) ஆகிய மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வவுனியாவில் மற்றொரு பகுதியில் இதேபோன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன்போது லயந்தன் (வயது 13) மற்றும் அருண்குமார் (வயது 31) ஆகிய இருவர் பாதிப்படைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இருவேறு இடங்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 5 பேரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.