தீ விபத்தில் உயிரிழந்த ஐவர்: வெளியான திடுக்கிடும் பின்னணி
இராகலையில் 5 உயிர்களைக் காவு கொண்ட தீ விபத்து சம்பவத்தில், பெட்ரோல், பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு வலப்பனை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, இராகலை பொலிஸார், மேற்படி இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.
ஒக்டோபர் 7ஆம் திகதி இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் உள்ல தனியாக இருந்த வீட்டில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து சம்பவத்தில் குறித்த குடும்பத்தை சேர்ந்த தங்கையை இரவீந்திரன் வயது (27) என்பவர் உயிர் தப்பியிருந்தார்.
இந்த சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், நீதிமன்றத்தின் உத்தரவின் ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் (22 ) ஆம் திகதிக்கு திங்கட்கிழமை ஒத்திவைத்தார்.