உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் இந்திய கடற்படையிடம் கையளிப்பு
யாழ்.காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் இன்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் தேதி ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் இரவு யாழ்பாணம் காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடல் யாழ்ப்பாணத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை சுமார் 7 மணியளவில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன் உடல் முறையாக இலங்கை கடற்படையினரிடம் தூதரக அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று பிற்பகல் இந்திய அதிகாரிகளிடம் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


