இலங்கை வரலாற்றில் முதல்முறை: கலாபூஷண விருதுக்கு தெரிவான தமிழர்!
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கலாபூஷணம் விருதுக்கு யாழ்.உடுவில் பிரதேச செயலகத்தினை சேர்ந்து 79 வயதுடைய செல்லத்தம்பி பரமநாதன் என்பவர் தெரிவாகியுள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
செல்லத்தம்பி பரமநாதன் கடந்த 19 ஆண்டுகளாக கலாபூஷணம் விருதுக்காக விண்ணப்பித்து வந்துள்ள நிலையில் 2006 - 2015 ஆண்டு காலப்பகுதியில் 10 ஆண்டுகளாக, மாவட்ட செயலகத்திற்கு இவருடைய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இவர் அதிஉச்ச புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் செல்லத்தம்பி பரமநாதனுக்கு விருது வழங்கப்படவில்லை. கடந்த சில வருடமாக இவருடைய விண்ணப்பம் குறித்த திணைக்களத்துக்கு விருதுக்காக அனுப்பி வைக்கப்படவில்லை.
மேலும் கடந்த 2020 ஆண்டும் கூட இவருடைய விண்ணப்பம் பிரதேச செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இதேவேளை, தனிப்பட்ட முயற்சினால் குறித்த கலைஞர் தேசிய பட்டியல் மூலம் விருதினை பெற்றுக் கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.