இலங்கை - இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் கூட்டம்
இலங்கை - இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.
இதில் இலங்கை மற்றும் இத்தாலி இடையே அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, கலாசாரப் பரிமாற்றம், எரிசக்தி மாற்றம், பல்தரப்பு உறவுகள், விமானப் போக்குவரத்து, கடல்சார் ஒத்துழைப்புகள் மற்றும் விவசாயம் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டன.