2024 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம்; இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு இல்லையா!
இவ்வருடத்தின் முதல் சந்திரகிரகணம் இன்று (25) தோன்றவுள்ளது. இந் நிலையில், இதனை கண்டுகளிக்கும் வாய்ப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த சந்திரகிரகணமானது இன்று (25) காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை தோன்றவுள்ளது.
100 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வு
இந்த சந்திரகிரகணம் பிற்பகல் தோன்றவுள்ளதால் இலங்கை மக்களுக்கு அதனை கண்டுகளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழப் போகிறது. வேத ஜோதிட சாஸ்திரப்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் ஏற்படவது மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.