தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ...தீக்கிரையாகிய பல இலட்சம் ரூபா சொத்து
புத்தளம் மாவட்டம் - கற்பிட்டி குறிஞ்சிபிட்டி பகுதியில் இருக்கும் தும்புத் தொழிற்சாலையில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கற்பிட்டி பொலிஸார் மற்றும் கற்பிட்டி விஜய கடற்படையினர் இணைந்து அனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பல இலட்சம் பெருமதியான இயந்திரங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில் தேங்காய், சிரட்டைகள், தேங்காய்த் தும்புகளும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (12-09-2022) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்து சம்பவம் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.