300 பேருடன் புறப்படத் தயாரான விமானத்தில் தீ; அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்!
அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பயணிகளுடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது.
பெரும் பாதிப்பு தவிர்ப்பு
இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் செல்லும்போது திடீரென இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியதோடு, பயணிகளை விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு உடனடியாக விரைந்து செயல்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும் அந்த தகவ்ல்கள் கூறுகின்றன.