நாட்டில் வருமான குறைவாக உள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியம், உணவுப் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதனால் நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைக் கண்டறிந்து சிறப்பு நிதி உதவி வழங்க அமைச்சரவை முடிவு செய்தது. மே மற்றும் ஜூலை மாதங்களில் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.