ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதில், நிதியமைச்சை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சு பதவியை நான் ஏற்றுக்கொண்டால் அது எனக்கு தனிப்பட்ட வெற்றியாக இருக்கும். இருப்பினும், அது நாட்டுக்குக் கிடைத்த வெற்றி அல்ல. தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் நாட்டுக்காக என்னை அர்ப்பணிக்க முழுமையாக தயாராக இருக்கிறேன்.
சுதந்திரமாக இருந்து அரசாங்கத்தில் இணைவதை தேசிய அரசாங்கம் என்று சொல்ல முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்தவாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கான கால எல்லையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெளிவாகக் கூற வேண்டும்.
ஒரே இரவில் அதைச் செய்யும்படி நாங்கள் அவரை வற்புறுத்தவில்லை. அதற்கான கால அவகாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.