நிதியமைச்சரே திறைசேரியை பூச்சியமாக்கப்போவதை ஏற்றுக்கொண்டுள்ளார்!
நாட்டின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நாடு தொடர்பில் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை இந்த வரவு செலவுத் திட்டம் தெளிவுபடுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. விசேடமாக கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) ஆட்சிக்கு கொண்டுவந்து செய்த பிழையை திருத்திக்கொள்வதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டி தருணம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
திறைசேரியை பூச்சியமாக்கப்போவதை நிதியமைச்சரே ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மக்களிடம் அசாதாரண முறையில் வரியை அறவிட்டு அரசாங்கத்தை கொண்டு நடத்த எதிர்ப்பார்கின்றனர். நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் பதில் இல்லை எனத் தெரிவித்தார்.
ஒருசில விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. உதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒய்வூதியம் போன்ற விடயங்களை வரவேற்கலாம். எனினும் அதனைத் தாண்டி எந்தவொரு முக்கிய விடயமும் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனுசா நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.