கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

Sajith Premadasa Gun Shooting Murder
By Viro Oct 26, 2025 01:02 PM GMT
Viro

Viro

Report

சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு இன்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி | Final Tribute By Sajith To Murdered Lasantha

பக்கசார்பற்ற விசாரணை

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். கொலை கலாசாரம் சமூகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாசாரத்தின் மற்றொரு அங்கமாகும்.

கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி | Final Tribute By Sajith To Murdered Lasantha

இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை, காட்டுச் சட்டம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக, குடிமக்களின் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ளது. இந்த கொலை கலாசாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது விழுந்த அடியாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் வாழும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும், ஆகையால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரது கொலை குறித்து பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் மூலம் பொலிஸ்மா அதிபரிடம் அவர் பாதுகாப்பு கோரிய போதிலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு வழங்காமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US