11 கட்சிகளின் இறுதித் தீர்மானம்! கோட்டாபயவின் அழைப்பிற்கு எடுக்கப் பட்ட முடிவு
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சுயேச்சைக் கட்சிகளும் இன்று ஜனாதிபதியுடன் நிபந்தனையுடன் கூடிய கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட இன்றைய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதமரோ அல்லது அமைச்சரவையோ இன்றி தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தினால் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு 11 கட்சிகள் தற்போது தீர்மானித்துள்ளன.