இளம் பெண்ணுடன் சண்டை ; நடுவீதியில் தீக்குளித்து உயிரை மாய்த்த இளைஞர்
சிலாபம், கொக்கவில பகுதியில் இளம் பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் வலப்பனை, அட்டகெல்லந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், கொக்கவில சந்தியில் இந்த நபர் தனது மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு முதல் கொக்கவில் சந்திப்பில் ஒரு இளம் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் சிலாபம் பகுதிக்கு ஏன் வந்தார் என்பது இதுவரை தெரியவரவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.