உலக கிண்ணஇறுதிப்போட்டி; நடுவர் அறிவிப்பு
உலக கிண்ண இறுதிப்போட்டிக்கான நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகமே எதிர்பார்க்கும் 23ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (19) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடக்கிறது. அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றது.

இறுதிப்போட்டியில் நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உதவி நடுவர்களாக தாமஸ் கிளான்ஸ்னிக், ஆன்ட்ராஸ் கோவாசிச் ஆகியோர் செயல்படுவார்கள். 4ஆவது நடுவராக ஆதாம் மகாத்மேவும், மாற்று உதவி நடுவராக முகமது அல்கலாப்பும் இருப்பார்கள். 'பிபா' நடுவர் குழுவின் தலைவர் பியர்லூகி கொலினோ இதனை அறிவித்தபோது, சிலாவ்கோ வின்சிச் இன்ப அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார்.