இதய ஆரோக்கியத்திற்கு உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
ஓட்ஸ்
கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று ஓட்ஸ். இது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
சியா விதைகள்
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கவும் கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகின்றன. சியா விதைகளை தண்ணீரில் ஊறத்து அல்லது தயிர், ஸ்மூத்திகளில் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்துவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ஆப்பிள்
ஆப்பிள் பழங்களில் பெக்டின் உள்ளது. இது ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது கொழுப்பைக் குறைக்கவும் தமனிகளில் கசடுகள் படிவதைத் தடுக்கவும் உதவுகிறது. தினமும் ஒரு ஆப்பிளை சிற்றுண்டியாக சாப்பிடுவது அல்லது சாலடுகள் மற்றும் ஓட்மீலில் ஆப்பிள் துண்டுகளைச் சேர்ப்பது சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.
அவகேடோ
அவகேடோ பழத்தில் இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் உதவுகிறது.
பீன்ஸ்
பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சூப்கள், குழம்புகள் மற்றும் சாலட்களில் பீன்ஸைச் சேர்ப்பது வயிறு நிறைந்த திருப்தியை தருவதோடு, இருதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.