தொழிலதிபர் திருமணத்திற்காக அரண்மனை, சொகுசு விமானங்கள் ; போட்டோ-ஷூட்டில் வருங்கால மனைவி கொடுத்த ட்விஸ்ட்
தொழிலதிபரின் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 350 அடி பள்ளத்தில் தள்ளி அவரை கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் போட்ட வருங்கால மனைவி, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டது மகாராஷ்டிராவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகனுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சிக்காக ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையை 17 கோடி ரூபாய்க்கு புக் செய்துள்ளனர்.

இளம்பெண் கைது
விருந்தினர்கள் வந்து செல்வதற்கு இரண்டு சொகுசு விமானங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மணப்பெண் தனது 20 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இதையொட்டி தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தையை போட்டோ-ஷூட் நடத்த தொழிலதிபரின் மகன் முடிவு செய்துள்ளார்.
இதற்காக புனேயில் உள்ள புகழ்பெற்ற லோகட் கோட்டைக்கு சென்றுள்ளார். அதற்கு முந்தைய நாள் லோகட் கோட்டைக்கு இருவர் மட்டும் தனியாக சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக 350 அடி பள்ளத்தில் தவறி விழுந்து தொழிலதிபரின் மகன் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக இளம்பெண்ணை விசாரித்துள்ளனர்.
அத்துடன், அவரின் செல்போன் உரையாடல்கள், சமூகவலைதள பதிவுகள், தொழில்நுட்ப சான்றுகள் அனைத்தையும் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.
அதில் வருங்கால கணவனை தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் போட்டது அம்பலமானது.
இந்த சதிச் செயலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.