வட்ஸ்அப் குழு மூலம் அரங்கேறிய தகாத செயல் ; சோதனையில் பிடிபட்ட இளைஞர்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் தகவல் வழங்கி, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த இளைஞர் ஒருவர் ஹசலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹசலக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 02 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்த இளைஞர் ஹசலக பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைக
போலிப் பெயர் ஒன்றில் வட்ஸ்அப் தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்கி, இந்த போதைப்பொருள் வியாபாரி ஹசலக்க, வேரகந்தொட்ட, மஹியங்கனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஹசலக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.