தீபாவளிக்கு முதல் நாள் கொண்டாடப்பட்டு வரும் இந்துக்களின் பண்டிகை; பலரும் அறியாத தகவல்
தீபாவளிக்கு முதல் நாள் ஒக்டோபர் 23ஆம் திகதி தந்தேரஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இந்த தந்தேரஸ் பண்டிகை நாளில் மக்கள் தங்கம், நகை, தங்க காசுகள், வெள்ளி, பாத்திரங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்யும் நாளாக கருதப்படுகின்றது.
தீபாவளி கொண்டாட்டத்தின் தொடக்கமாக தந்தேரஸ் பண்டிகை கருதப்படுகிறது.
அத்தோடு தந்தேரஸ் அன்று ஆயுர்வேத கடவுளான தன்வந்திரியை மக்கள் வழிபடுவதோடு தந்தேரஸ் நாள் தேசிய ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
காரணம்
"16 வயது ஹீம ராஜாவுக்கு ஜோசியம் பார்த்தபோது, அவருக்கு திருமணம் செய்து நான்கு நாட்களில் இறந்துவிடுவார் என தெரியவந்தது. இதனால், அவருக்கு திருமணமாகி நான்காவது நாள் தூங்கவே கூடாது என மனைவி கட்டளை போட்டுவிட்டாராம்.
அத்தோடு அறை கதவுக்கு வெளியே தங்க நகைகள், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை குவித்துவைத்ததோடு அறை முழுவதும் விளக்குகளை ஏற்றி வைத்து ராஜா உறங்கக்கூடாது என்பதற்காக கதை சொல்லுவது பாட்டு பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது எமன் பாம்பு வடிவத்தில் வந்து கதவை தட்டி உள்ளார். அங்கிருந்த தங்க நகைகள், விளக்குகளின் வெளிச்சத்தால் அவரால் தெளிவாக பார்க்க முடியவில்லை. எனவே, அங்கிருந்த தங்க நகைகள் மீது ஏறி அமர்ந்து ராஜாவின் மனைவி கூறிய கதைகள், பாடல்களை கேட்டுக்கொண்டிருந்துள்ளார் எமன்.
அடுத்த நாள் காலையில் எமன் எழுந்து போய்விட்டார். இதனால், ஹீம ராஜா மரணத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் அந்த நாள் தந்தேரஸ் என அழைக்கப்படுகிறது.
இதனால் தந்தேரஸ் அன்று மக்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தீபாவளி பண்டிகை வருகிறது" என்று கூறப்பட்டு வருகின்றது.