வவுனியாவில் பெரும் சோகம்... ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழப்பு.!
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் உடல் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 08.11.2024 திகதி அன்று வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த அசிரியை மீட்டு நெடுங்கேணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த அசிரியின் உடலில் விசம் ஏறியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரவு நேரங்களில் விச ஊர்வ ஏதாவது கடித்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 47 அகவையுடைய சுபாஜினி தயானந்தன் என்ற 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.