இலங்கையில் ரஷ்யா சுற்றுலா பயணியின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து: அம்பலப்படுத்திய பெண்
இலங்கைக்கு வந்த ரஷ்யா சுற்றுலா பயணி ஒருவர் உயிர்க்கு ஆபத்து ஏற்பட்டது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பிலிருந்து பொலன்னறுவைக்கு தனியார் பஸ்ஸில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் தொடர்பில் பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
குறித்த சுற்றுலா பயணி பஸ் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் ஆபத்தானது. அவர்கள் ஏன் நம் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்? நாங்கள் சாக விரும்பவில்லை. நாங்கள் சுற்றுலாப் பயணிகள். நாங்கள் இலங்கையைப் பார்க்க விரும்புகிறோம். நாங்கள் இங்கே மரணிக்க விரும்பவில்லை.
கண்டிக்கு போகும் திட்டத்தில் உள்ளோம். ரயில் சேவைகள் இல்லாமையினால் பேருந்தில் பயணிக்க வேண்டி உள்ளது. இருப்பினும் பயமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பஸ்ஸின் வேகம் தொடர்பில் காணொளியை பதிவு செய்து பொலநறுவை பொலிஸில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.