சாணக்கியனிற்கு எதிராக இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவை சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சாணக்கியனால் எச்சரிக்கப் பட்ட பொலிஸ் அதிகாரியின் மகள் தனது தந்தை தொடர்பில் குறிப்பிடுகையில்,
எனது தந்தை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் சேகரிக்கும் மாவட்ட அதிகாரி எனவும், தனது தந்தையாரை சாணக்கியன் தகாத வார்த்தைகளால் கதைத்தமை தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.