பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் சம்பவம் ; சுகாதார அமைச்சு விசேட அறிக்கை
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு எதிராக நடந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உண்மைகளை ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஒன்று தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என அமைச்சு எதிர்பார்க்கின்றது.
அதுவரை அமைதியாக செயல்படவும், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும், சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.