பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாத முக்கிய பெண் போட்டியாளர்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி முடிவடைந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.
கடந்த 5 சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அத்தோடு இதில் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 50 லட்சம் பணமும், சொகுசு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் இரண்டாம் மூன்றாம் இடத்தை விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் பெற்றனர். மேலும் அசீம் டைட்டில் வின்னர் ஆனதினால் அந்த டிவியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். 'Boycott விஜய் டிவி' என்றும் கூட ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், முந்தைய சீசன்களை போலவே சீசன் 6 போட்டியாளர்களை மீண்டும் வர வைத்து 'பிக்பாஸ் கொண்டாட்டம்' என்கிற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி உள்ளது.
பிக்பாஸில் பங்குபெற்ற அனைந்து போட்டியாளர்களும் எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் நிவாஷினி மட்டும் வரவில்லையென தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதற்கான காரணம் என்ன என்பது பற்றி தற்போது தகவல் வெளிவரவில்லை.
மேலும் பல்வேறு சேனல்களிலும் இவர்கள் போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.