யாழில் மதுபோதையில் சுற்றித்திரியும் வெளி மாவட்ட பெண்களால் சிறுவர்களுக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண் யாகசர்கள் மதுபோதையில் நடமாடுவதாகவும், அவர்களால் சிறுவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுவதாக மக்கள் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவுவேளையில் வீதியில் உள்ள கடைகளுக்கு முன்னால் ஏராளமான பெண் யாசகர்கள் உறங்குவதாகவும் அவர்களில் பலர் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமது பிள்ளைகளைப் பயன்படுத்தியும் துன்புறுத்தியும் யாசகம் எடுத்துவிட்டு அந்தப் பணத்தை அடாத்தாகப் பறித்து மதுபானத்தைக் கொள்வனவு செய்து உட்கொள்கின்றனர் என்றும் பொலிஸாரிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த யாசகர்களைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாண மாநகர சபை முறையான நடவடிக்கைகள் எதையும் எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.