பெப்ரவரி 14; காதலர்களுக்கு க்ஷாக் கொடுத்த இந்திய அரசங்கம்!
பெப்ரவரி 14 உலகெங்கிலும் உள்ள ஜோடிகள் காதலை வெளிப்படுத்த தங்களை தயார்படுத்தி கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சு இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக காதலர் தினமான பெப்ரவரி 14 அன்று, ‘பசு அரவணைப்பு தினத்தை’ கடைப்பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
பசு அணைப்பு தினம்
மேற்கத்திய பண்பாடுகளால் நம் வேத கால பழக்கவழக்கங்கள் அழியும் நிலையில் உள்ளது , பசுவை அரவணைப்பதன் மூலம் பேருவகை அடைய முடியும் எனவும் கூறியுள்ளது.
அதோடு தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வாழ்க்கையை நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும் வகையில் பசுப் பிரியர்கள் அனைவரும் பெப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினம் கொண்டாட வேண்டும்” என்றும் விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.
இந்நிலையில் காதலர் தினத்தில் பசுவுடன் ரொமான்ஸா என இந்த கோரிக்கையை கேலியாக்கி இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர் .
இந்திய சினிமாக்களில் பசுக்களுடன் கதாநாயகர்கள், நாயகிகள் தோன்றும் காட்சிகளையும் கொமெடியான பசு வீடியோக்கள், மீம்களை பறக்கவிட்டுள்ளனர் இணையவாசிகள்.