சொந்த மகளை வன்புனர்ந்த தந்தை தலைமறைவு; வலைவீசி தேடும் பொலிஸார்!
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியபிடவெவ, கியுல பகுதியைச் சேர்ந்த 14 வயதுப் பாடசாலை மாணவியான தனது மூத்த மகளுக்குப் பாலியல் துஷ்பிரயோகம் இழைத்த மூன்று பிள்ளைகளின் தந்தை தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்னிலையில் தலைமறைவான தந்தையைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
பாதிக்கப்பட்ட சிறுமி தனது தங்கையுடன் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டில் வசித்து வருவதுடன், சிறுமியின் தாயும் தந்தையும் கூலி வேலைகளைச் செய்து அதே வீட்டில் வசித்து வருகின்றனர்.
வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட தந்தை, தனது மகளுக்குப் பல சந்தர்ப்பங்களில் இந்தப் பாலியல் துஷ்பிரயோகங்களை இழைத்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள 49 வயதுடைய சந்தேகநபரைத் தேடும் பணிகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார். துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக எம்பிலிபிட்டிய பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகாளை முன்னெடுத்து வருகின்றனர்.