விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து!
சவூதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் UL253 மற்றும் UL254 ஆகியவை இன்று (12) மற்றும் நாளை (13) இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது அடையாளம் காணப்படாத ஏவுகணைப் பொருள் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 11) தாக்கியதில் தீ பரவியதாக, யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.

12 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயம்
விமான நிலையத்தின் நான்காவது முனையம் (Terminal 4) மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது. இதே விமான நிலையத்தில் 24 மணித்தியாலங்களுக்கும் குறைவான இடைவெளியில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்திற்கு அருகில் வந்த குரூஸ் ஏவுகணை ஒன்றைச் சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்துத் தாக்கி அழித்ததாகக் கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிக்கி தெரிவித்துள்ளார்.
இன்னிலையில் சவுதிக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.