ஆண் குழந்தைக்காக இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை
தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென இரண்டு மகள்களை கொன்று அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்த அசோக் யாதவ் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் அசோக் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு ஆண் குழ்ந்தை வேண்டும் என விரும்பியுள்ளனர்.ஆனால் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
குழந்தைகளை கொன்ற தந்தை
இதனால் தம்பதிகளிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அசோக் யாதவ், முதலில் அவரது மனைவியை தாக்கியதுடன் பின்னர் ஆத்திரத்தில் இரண்டு மகள்களையும் தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதில் குழந்தைகள் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், இந்நிலையில் மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், இரு குழந்தைகளையும் அசோக் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாங்களாகவே அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தாய் மாமா, பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, அடக்கம் செய்த குழந்தைகளை பொலிஸார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.