தமிழர் பகுதியில் முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்... சிறுமிக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்!
முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் தந்தை ஒருவர் தனது 11 வயதான மகளை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தையை நேற்றிரவு (6-03-2024) முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த 3 வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் நேற்றிரவு குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.