பெற்ற மகளுக்கு தந்தை செய்த மோசமான செயல் ; பல தடவைகள் அரங்கேற்றப்பட்ட கொடூரம்
13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குளியாப்பிட்டியில் வசிக்கும் சிறுமியின் தந்தையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனிமையிலிருந்த சிறுமி
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் உள்ளார், மூத்த சகோதரி, வேலை காரணமாக மாரவில பகுதியில் தங்கியிருந்தார்.
சந்தேகநபரான தந்தை, மகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள தனது வீட்டில் சிறுமியின் தந்தையாலும், சேனனிகம பகுதியில் உள்ள அவரது காதலனாலும் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகவும், ஹெட்டிபொல மற்றும் பிங்கிரிய பொலிஸ் பிரிவுகளிலும் இதேதான் நடந்துள்ளதாகவும், தொடர்புடைய விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின் பின்னர் சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்ததுடன் வழக்கின் முன்னேற்றம் குறித்து மேலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.