பிரித்தானியாவில் மகனின் கண்ணில் பசையை ஊற்றிய தந்தை! பரபரப்பு தகவல்
பிரித்தானியாவில் தனது மகனுக்கு சொட்டுமருந்து என நினைத்து ஒட்டுப்பசையை கண்ணில் ஊற்றிய தந்தையால், மகன் 4 நாட்கள் கண்களை திறக்கமுடியாமல் அவதியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் North Yorkshire மாகாணம் Trish நகரை சேர்ந்தவர் கேவின் டே. இவருக்கு ரூபர்ட் என்ற மகன் உள்ளார். 9 வயதான ரூபர்ட்டுக்கு இடது கண்ணில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது தந்தையான கேவின் டேவிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கண் அரிப்பை குணப்படுத்தும் சொட்டுமருந்தை தேடியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த ஒட்டுப்பசையை கண்ணுக்கு ஊற்றும் சொட்டுமருந்து என நினைத்து அதை எடுத்துள்ளார். அந்த ஒட்டுப்பசையை தனது மகனின் இடது கண்ணில் ஊற்றியுள்ளார். தான் ஒட்டுப்பசையை மகனின் கண்ணீல் ஊற்றுகிறோம் என்பதை அறியாத தந்தை பசை முழுவதையும் ரூபர்டின் கண்ணில் ஊற்றியுள்ளார்.
சிறிது நேரத்தில் தான் ஒட்டுப்பசையான சூப்பர் குளுவை தனது மகன் இடது கண்ணில் ஊற்றியதை kevin அறிந்துள்ளார். உடனடியாக தனது மகனின் கண்களை திறக்கும்படி kavin கூறியுள்ளார். ஆனால், இடது கண்ணை அவரால் மகனால் திறக்கமுடியவில்லை. ஒட்டுப்பசை அவரது மகனின் இடது கண்ணை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனை தொடர்ந்து வைத்திய குழுவினருக்கு மகனின் தந்தை தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த வைத்தியக் குழுவினர் ரூபர்ட்டை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது இடது கண்ணை திறக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால், வைத்தியர்களால் Rupert-யின் கண்ணை திறக்கவைக்க முடியவில்லை. 4 நாட்கள் ரூபர்ட் தனது இடது கண்ணை திறக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
நான்கு நாட்களுக்கு பின்னர் Rupert-யின் கண்களை மூடியிருந்த ஒட்டுப்பசை மெல்ல விலகியது. கண்ணை தொடர்ச்சியாக தண்ணீரால் கழுவியதால் பசையின் ஒட்டுத்தன்மை குறைந்து கண்ணை திறக்க வழிபிறந்துள்ளது.
இதனை தொடர்ந்து 4 நாட்கள் அவதிக்கு பின்னர் Rupert தனது இடது கண்ணை திறந்துள்ளார். ஆனால், அவரின் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் Rupert-யின் கண்பார்வை தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளதாக அவரது தந்தை kevin தெரிவித்துள்ளார்.