ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாவலப்பிட்டி மெதகஹவதுர பிரதேசத்தில் மகாவலி கங்கைகையைக் கடப்பதற்கான பாலமானது உடைந்து விழுந்துள்ளதால், பிரதேச மக்கள் கங்கையைக் கடப்பதற்கு கட்டுமரத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த சூழலில் நாவலப்பிட்டியில் தொடரும் சீரற்ற கால நிலையில் காட்டுமரத்தினை கட்டுவதற்காக சென்றபோதே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகின. இவ்வாறு ஆற்றிலடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நபர் நாவலப்பிட்டி, மெதகஹவதுர பிரதேசத்தைச் சேர்ந்த கே.ஜி.திஸ்ஸ என்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஆற்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.