மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!
நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்லதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"நாவுல சுத்தா" என அழைக்கப்படும் 43 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். "நாவுல சுத்தா" என அழைக்கப்படும் இவர், போதைக்கு அடிமையானவர்களுக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருபவர் என உறவினர்கள் கூறுகின்றனர்.
தடயங்கள் மீட்பு
இதேவேளை, கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் மிளகாய் தூள் வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்தவரின் தாயார் அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வேறு இடத்திலும் வசித்து வருகின்றனர்.
சில நாட்களாக மகனை காணாத தாய் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்த போது வெட்டுக்காயங்களுடன் குறித்த நபர் விழுந்து கிடந்ததை பார்த்துள்ளார்.
அங்கு அவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் தொடர்பில் பல தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.