நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி விபத்தில் மரணம் ; அதிர்ச்சியில் திரை துறையினர்
நடிகர் ஜீவா , நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தை ஆர்.பி.சௌத்ரி விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உயிரிழந்தார். 1998 ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சௌத்ரி.

ஆரம்பத்தில் இரண்டு திரைப்படம் மலையாளத்தில் தயாரித்தார். அதற்கு பிறகு 1990 ஆம் ஆண்டு புதுவசந்தம் படத்தை தயாரித்து தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதுவசந்தம், புரியாத புதிர், நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.