மாமனார் மருமகன் மோதலில் நடந்தேறிய கொடூரம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்
அநுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ - இஹலகம பகுதியில் மாமனாரின் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிர விசாரணை
உயிரிழந்தவர் இஹலகம, கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மாமனார் மருமகனை கட்டுத்துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.