பைக் கேட்ட மாப்பிள்ளையை மணவறையில் வைத்து வெளுத்து வாங்கிய மாமனார்!(Video)
இந்தியாவில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் மணவறையில் வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் சிரிப்பு, கோபம் , அழுகை என பலவிதமான காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
கண்ணீர் விட்ட மாப்பிள்ளை
அதன் வரிசையில், தற்போது மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறித்த திருமணம் முடிந்தவுடன் தனக்கு வரதட்சணையாக பைக் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் மணப்பெண்ணை அழைத்துச் செல்ல முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
Kalesh B/w Father-in Law and Groom to be Over Bike in Dowrypic.twitter.com/UE38A7fYO2
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 8, 2023
மணமகள் வீட்டார் மணமகனிடம் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து அசைவதாக இல்லை.
இதனையடுத்து நின்றிருந்த மணப்பென்ணின் தந்தை ஆத்திரமடைந்து தனது செருப்பைக் கழற்றி மாப்பிள்ளையை அடிக்க மணமகனின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது. அதோடு , தன்னை விட்டுவிடுமாறு அந்த மாப்பிள்ளை தன் மாமனாரிடம் கெஞ்சுவதையும் காண முடிகின்றது.