மகளை காப்பாற்ற மருமகனுக்கு மாமனார் நிகழ்த்திய கொடூரம் ; பலியான இளைஞன்
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்பெத்தாவ பகுதியில் இன்று (08) திங்கட்கிழமை அதிகாலை மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மாமடல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இறந்தவரின் மனைவி, குடும்பத் தகராறு காரணமாக அம்பலந்தோட்டா மாவட்டம், மல்பெத்தாவாவில் உள்ள அவரது தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தார். இதன்போது குடிபோதையில் இருந்த கணவன் தன் மனைவியை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் தந்தை தன் மருமகன் மீது மாமனார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்தே மருமகன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாந்தோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.