தமிழர் பகுதியில் 7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மாமனார்
மட்டக்களப்பில் 7 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை கைது செய்த பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
பொலிஸார் தெரிவித்தது
இதன் போது சிறுமியை 49 வயதுடைய தந்தையும் 52 வயதுடைய மாமனாரும் இணைந்து கூட்டாக துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது இருவரையம் எதிர்வரும் 27 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளது.