3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை ; காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலம் பெத்தபொயபள்ளியைச் சேர்ந்தவர் புத்தா வெங்கடேஸ்வர் (வயது 36). இவரது மனைவி தீபிகா. இருவருக்கிடையே கணவன்-மனைவி தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்த புத்தா வெங்கடேஸ்வர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்தால் குழந்தைகள் சிரமப்படுவார்கள் என்று நினைத்த அவர், தனது குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பெட்ரோல் ஊற்றி தீ
3 குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து 3 குழந்தைகள் மீதும் ஈவு இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 3 பேரும் தீயில் எரிந்து பரிதாபமாக இறந்தனர். பின்னர் புத்தா வெங்கடேஸ்வர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவனும், குழந்தைகளும் வீடு திரும்பாததை அறிந்த தீபிகா பல இடங்களில் தேடினார். ஆனால் அவர்கள் கிடைக்காததால் பொலிஸில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 3 குழந்தைகளையும் கொலை செய்து அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலமாக 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. குழந்தைகள், கணவரின் உடல்களை பார்த்து தீபிகா மற்றும் உறவினர்கள் கதறிஅழுதது பரிதாபமாக இருந்தது.