ஊழல் எதிர்ப்பு முன்னணி தலைவரை தாக்கிய தந்தை மற்றும் மகன்
ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபாய் மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தந்தை முப்பத்தைந்து வயதுடைய வர்த்தகர் மற்றும் அவரது இருபத்தி மூன்று வயது மகன் கூலித் தொழிலாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் குமாரவின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
அத்தோடு தாக்குதலில் படுகாயமடைந்த நாமல் குமார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இவர் தடிகளால் தாக்கப்பட்டதாகவும் கால்களால் உதைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.